For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை - காவல்துறை தீவிர விசாரணை!

08:50 PM Nov 23, 2023 IST | Web Editor
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை   காவல்துறை தீவிர விசாரணை
Advertisement

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு முனைவர் பட்டமேற்படிப்பு பயின்று வந்தார். இவர் கடந்த நவ. 9-ம் தேதி காலை 6.20 மணியளவில் தனது காரில் சின்சினாட்டியில் உள்ள வெஸ்டர்ன் ஹில்ஸ் வையாடக்ட் பகுதியில் அவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது காரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அவரது கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு குண்டுகள் பாய்ந்ததில், அவர் நிலைதடுமாறி, சாலையோர சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 2 நாள்கள் தீவிர சிகிச்சைக்கு பின், சிகிச்சை பலனின்றி நவ. 11-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர் ஆதித்யா, வட இந்தியாவை சேர்ந்தவர் என்பதும், அவர் முன்னதாக 2020-ம் ஆண்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பட்டமேற்படிப்பை நிறைவு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்திய குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement