Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிசிசிஐ ஒப்பந்தங்களில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கம்? - வெளியான புதிய தகவல்!

08:33 AM Feb 24, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய அணி வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Advertisement

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அந்த வகையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று(பிப்.23) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டிருந்தார

அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனிடையே இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பிசிசிஐ வலியுறுத்தியது. ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்ததாக தெரிகிறது.

இவரைப் போல் ஸ்ரேயஸ் ஐயரையும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார்.  இதனால் பிசிசிஐ, அவரை பரிசோதிக்கும் படி என்சிஏ-விற்கு உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து,  என்சிஏ மருத்துவர் பிசிசிஐ-க்கு அனுப்பிய மின்னஞ்சலில், "ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார்" என்று தெரிவித்தார். இதனால்,  தனது அறிவுறுத்தல்களை கேட்காத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags :
BCCIENGLANDIndiaIndian Cricket TeamIPLIshan KishanRanchi TestShreyas Iyertest match
Advertisement
Next Article