For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#America சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பட்டாச்சார்யா நியமனம்!

12:18 PM Nov 27, 2024 IST | Web Editor
 america சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பட்டாச்சார்யா நியமனம்
Advertisement

அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அமெரிக்காவில் கடந்த நவ.5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராகிறார் ட்ரம்ப். தொடர்ந்து, அவர் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறும் தலைவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து ஜே.பட்டாச்சார்யா கூறும்போது, "அதிபர் டிரம்ப் என்னை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக நியமித்ததன் மூலம் நான் பெருமையடைகிறேன். அமெரிக்க அறிவியல் நிறுவனங்களை நாங்கள் சீர்திருத்துவோம். அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற சிறந்த அறிவியலின் பலன்களைப் பயன்படுத்துவோம்" என்றார்.

யார் இந்த ஜே.பட்டாச்சார்யா?

ஜே.பட்டாச்சார்யா கடந்த 1968-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் 1997-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து, 2000-ல் ஸ்டான்போர்டின் பொருளாதாரத் துறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்றார். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரசார குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement