ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா (24) தகுதி பெற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "ஒலிம்பிக்கில் விளையாடுவது என் வாழ்நாள் கனவாக இருந்தது. தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகை பயிற்சியில் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை பொருத்து ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று இத்திய குதிரையேற்ற அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலந்து, நெதர்லாந்து, ஜெர்மணி மற்றும் பெல்ஜியமில் ஒத்திகை போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை, பெற்றதன் பேரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுஷ் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.