Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு - உலகக் கோப்பையுடன் வாழ்த்து பெற்றனர்!

01:15 PM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரிடம் வாழ்த்துகளை பெற்றனர்.

Advertisement

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது.

ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயல் தீவிரமடைந்தது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர். பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர்.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது.  இந்த நிலையில், அதிகாலை முதலே விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கிட்டத்தட்ட 16 மணி நேரம் இந்திய அணி வீரர்கள் விமானத்தில் பயணித்து வந்துள்ளனர். இப்பயணத்தில் ஒட்டுமொத்த அணியும் ஆட்டம் பாட்டம் விளையாட்டு நகைச்சுவை என சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு வருகை தந்த அவர்கள் அங்குள்ள மௌரியா ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினர். அங்கு 5ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டி20 உலகக் கோப்பை வடிவில் செய்யப்பட்ட சிறப்பு கேக்கை தயார் செய்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு வந்த ரோகித் ஷர்மா மற்றும் சக வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழி நெடுக கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு காத்திருந்து தங்களது வாழ்த்துகளை பரிமாறினர்.

இந்த நிலையில் தாயகம் திரும்பியுள்ள இந்திய வீரர்கள் இன்று காலை 11மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தி வாழ்த்து  பிரதமரின் இல்லத்திற்கு வருகை தந்தனர். இதன்பின்னர் பிரதமர் மோடியை சந்தித்த அவர்கள் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

இதன் பின்னர் மும்பை திரும்பும்  இந்திய வீரர்கள் கோப்பையுடன் நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, மேற்கூரை திறந்த பேருந்தில் ஊர்வலமாகச் செல்கின்றனர். பின்னர், மாலை சுமார் 5 மணியளவில் வான்கடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags :
ICCind vs saIND vs SA 2024IND vs SA FinalIndia t20 cricketNarendra modiPM ModiRohit sharmaT20 World Cup
Advertisement
Next Article