For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்போனது!

09:45 PM May 04, 2024 IST | Web Editor
இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்போனது
Advertisement

இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில்,தற்போது ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது. கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருதும் வென்றார்.

இதையும் படியுங்கள் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அப்டேட் வெளியிட்ட படக்குழு!

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி,  பாபி சிம்ஹா,  காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ராகுல் பிரீத் சிங்,  பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.  இந்த திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ‘ இந்தியன் 2’ திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.  ஆனால், ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. முன்னதாக, இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது, இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement