இந்தியன் 2 திரைப்படம் : 5விஷயங்களை உடனே மாற்றுங்கள் - படக்குழுவிற்கு சென்சார் போர்டு அறிவுரை!
இந்தியன் 2 திரைப்படத்தில் 5விஷயங்களை உடனே மாற்றுங்கள் என படக்குழுவிற்கு சென்சார் போர்டு அறிவுரை வழங்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தியன்-2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக நாளுக்கு நாள் ஒரு அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் ‘காலண்டர்’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது
இந்தியன் 2 திரைப்பட,ம் 3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்டுள்ளது. இப்படத்திற்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. குறிப்பாக படத்தில் 5 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் சென்சார் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும், காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும். குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் தோன்றும் காட்சியில் மாற்றம் செய்ய வேண்டும். 'டர்ட்டி இந்தியன்' [Dirty indian], 'F**k' உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும். படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விஷயங்களுக்கு NOC - தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.