For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘இந்தியன் 2’ படத்தின் 2வது பாடல் வரும் 29ல் வெளியீடு!

12:23 PM May 27, 2024 IST | Web Editor
‘இந்தியன் 2’ படத்தின் 2வது பாடல் வரும் 29ல் வெளியீடு
Advertisement

இந்தியன் 2 படத்தின் இரண்டாவது பாடல் மே.29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.  இதில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி கலவையான வரவேற்பையே பெற்றது. இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில் அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதாமாக நாளுக்கு நாள் ஒரு அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement