For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

112 வருடங்களில் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

03:24 PM Mar 09, 2024 IST | Web Editor
112 வருடங்களில் 4 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. 

Advertisement

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.  இதில் முதல் 4 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளிலும், இங்கிலாந்து 1 போட்டியிலும் வெற்றிப் பெற்றது.  இந்நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான 5வது போட்டி ஹிமாச்சல்பிரதேஷம் தர்மசாலாவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 4 விக்கெட்டுகளும்,  ஜடேஜா 1 விக்கெட்டுக்கும் வீழ்த்தினர்.  இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்  முடிவில் 477 ரன்களை குவித்தது.

மூன்றாவது நாளான இன்று 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கியது.  இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளும்,  பும்ரா,  குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களும்,  ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம்,  112 வருடங்களில் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஒரே அணி என்ற பெருமையைப் பெற்றது இந்தியா.

Tags :
Advertisement