Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!

07:13 AM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் தயாளன் ஹேமலதா களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தது. இந்திய அணி 122 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டினை இழந்தது.

தயாளன் ஹேமலதா 42 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சஜனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதையும் படியுங்கள் : ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது! – ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி பதிவு!

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. நேபாளம் தரப்பில் சீதா ராணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கபிதா ஜோஷி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நேபாள அணியில் அதிகபட்சமாக சீதா ராணா மகர் 18 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பிந்து ராவல் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார்.இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்த வெற்றி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 3-வது வெற்றியாகும். குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

Tags :
IndiaINDW vs NEPWNepalSportsNewsT20women asia cup
Advertisement
Next Article