3வது ஒருநாள் போட்டியில் வெற்றி - தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமனிலை வகித்தன.
இதையடுத்து இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. டிச.17-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியும், டிச.19-ம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீசாஇ தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது.
இதையும் படியுங்கள் : மழை, வெள்ளம் எதிரொலி - தூத்துக்குடியில் 5வது நாளாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை..!
பின்னர் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 45.5 ஓவர்களில் 218 எடுத்திருந்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்றது. நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடி சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.