அயர்லாந்துக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா ; அதிகபட்ச ரன்கள் குவித்து புதிய சாதனை
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுள்ள நிலையில் இன்று 3ஆவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, பிரதிகா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வந்தனர். ஸ்மிருதி மந்தனா தனது பங்கிற்கு 80 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரியுடன் சேர்த்து 7 சிக்கர்களை விளாசி மொத்தம் 135 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த பிரதிகா 129 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரிச்சா ஹோஸ் அரைதம் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் குறைந்தபட்ச ரன்களை தங்கள் பங்கிற்கு எடுத்திருந்தனர். மொத்தமாக 50ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 435 ரன்களை குவித்திருந்த நிலையில், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 4ஆவது மகளிர் அணி என்ற புதிய சாதனை இந்தியா அணி படைத்துள்ளது. முதல் 3 இடத்தில் நியூசிலாந்து அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.