For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அணு ஆயுத மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது" - பிரதமர் நரேந்திர மோடி!

40 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாடு எப்போதும் முப்படைகளுக்கும் தலை வணங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
08:40 AM Aug 15, 2025 IST | Web Editor
40 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாடு எப்போதும் முப்படைகளுக்கும் தலை வணங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 அணு ஆயுத மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது    பிரதமர் நரேந்திர மோடி
Advertisement

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. செங்கோட்டையில் முப்படைகள் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் வரவேற்று செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட 5000 சிறப்பு விருந்தினர்கள் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி பங்கேற்றுள்ளனர். இதை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றுகையில், "140 கோடி மக்களும் இன்று இந்த பெருமைக்குரிய பண்டிகையை கொண்டாடுகிறோம். 140 கோடி இந்தியர்கள் உற்சாகத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். நமது தேசிய கொடி நாடு முழுவதும் பட்டொளி வீசி பறக்கிறது. நாட்டிற்கு வழிகாட்டும் ஒளியாகச் செயல்படும் ஒரு ஆவணத்தை தந்ததன் மூலம், அரசியலமைப்புச் சபை மிக முக்கியப் பங்காற்றியது.

நமது அரசியல் சாசனம் ஒளி விளக்காக நம்மை வழி நடத்துகிறது. இது நமது கூட்டு சாதனைகளின் கொண்டாட்டம். நமது நாடு பல சவால்களை எதிர்கொண்டு 1947ல் சுதந்திரம் அடைந்தது. மத்திய அரசு திட்டங்களை பயனாளர்கள் பலர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு திட்டங்களின் பயனாளர்கள் செங்கோட்டையில் குழுமியுள்ளது நாடே இங்கு இருப்பதைப் போல உள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நாள் இன்று. பகல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் கொடுமையானது.

தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு நமது படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தி நமது வீரர்கள் பாடம் கற்பித்துள்ளனர். பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பல தசாப்தங்களாக நடைபெறாத அளவுக்கு தாக்குதலை நமது வீரர்கள் நடத்திக் காட்டினர். பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப்பெரியது. நமது எதிரிக்கு தக்க பாடததை புகட்டினோம். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தினசரி புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அணு ஆயுத தாக்குதல் மிரட்டலை கண்டு அஞ்சமாட்டோம், அதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம். தீவிரவாதத்துக்கு எதிராக நமது ராணுவம் எப்படி பதிலடி கொடுக்க வேண்டுமோ, அதன்படி உரிய முறையில் பதிலடி கொடுக்கும். ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது.

நமது விவசாயிகளின் நீரை வஞ்சிக்க கூடாது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஒரு அநியாயமான ஒப்பந்தம் ஆகும். எனவே தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரை நடத்திய நமது படைகளுக்கும், நமது தேசம் பெருமையுடன் நன்றி கூறுகிறது. சுயசார்பே இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் முக்கிய கருவி, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன. தொழில்நுட்பமே நமது நாட்டின் வளர்ச்சி பாதைக்கு உறுதுணையானது.

"MADE IN INDIA" என்பதே நமது ராணுவம் யாரையும் நம்பாமல் வலிமையுடனும், தன்னம்பிக்கையுடன் தாக்குதல் நடத்தியதற்கு முக்கிய காரணம். 40, 50 வருடங்களுக்கு முன்பாக செமி கண்டக்டர் என்பது நாம் பிற நாடுகளை நாடி இருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி நாம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் தொடர்பாக அரசு அளவில் ஆலோசனைகள் நடைபெற்றன. ஆனால் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த்துறையை செயல்படுத்தி இருந்தால் இந்தியா எப்போதே வளர்ந்திருக்கும். கடந்த 11 ஆண்டுகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி 30 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் பல புதிய அணைகள் கட்டப்படுகின்றன. அணுசக்தி உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியா உற்பத்தி செய்யும் எரிசக்தி 50 சதவீதம் மாசு ஏற்படுத்தாதவை. மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தி என்ற குறிக்கொளை 2030ம் ஆண்டு எட்ட வேண்டும் என குறிக்கோள் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அந்த குறிக்கோளை நிறைவேற்றியுள்ளோம். சீர்திருத்தம் என்பது தான் முன்னேற்றம். பசுமை எரிசக்தி நாட்டின் 50 சதவீத தேவைகளை பூர்த்தி செய்கிறது. அரிய தாது (rare materials) பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர்கள் வான்வழி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இந்தியாவிலேயே போர் விமானங்களுக்கான என்ஜின்கள் தயாரிக்கப்படும். சொந்தமான இந்தியப் போர் விமானம் தயாரிப்பே நமது குறிக்கோள். இது தொழில் நுட்பங்களின் காலம், இதனால் நாம் எதற்காக பிறரை சார்ந்து நிற்க வேண்டும். நாம் கொண்டு வந்த UPI திட்டம் தான் இன்று உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை நாம் சீர்படுத்தியுள்ளோம். நமது இளைஞர்களின் திறமைகளை நான் உணர்ந்திருக்கின்றேன் அவர்களின் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அதனால் நாம் எதற்காக பிறரை நம்பி இருக்க வேண்டும். இந்தியாவிலேயே உர உற்பத்தி செய்ய வேண்டும், அந்த்துறையில் நாம் சுயசார்பு பெற வேண்டும். மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளையும் நமது நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடக்கவும், சுயசார்புடையவர்களாக மாறுவதற்கு பாடுபட்டு வருகிறோம். ‘சமுத்திர மந்தன்’ நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,, இதற்கா தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்குகியுள்ளோம். அதேபோல, முக்கியமான கனிமங்களைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

உலகமும் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. கனிமங்கள் தொடர்பாக 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக முக்கியமான கனிமங்களில் சுயசார்பை நோக்கி முன்னேறி வருகிறோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட வேண்டும், அதற்கு நான் உங்களுக்கு துணை நிற்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement