"ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் ; தேர்தல் பத்திர ஊழல் அம்பலமாகும்" - ஈரோடு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
"ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் இதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திர ஊழல் அம்பலமாகும்" என ஈரோடு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஈரோடு நாடாளுமன்ற மக்களவை தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னியம்பாளையத்தில் ஈரோடு நாமக்கல்,கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சக்ரபாணி, மதிவேந்தன், முத்தூர் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் ,ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” இந்த மண்ணுக்கு எத்தனை பெருமை உண்டு. வெள்ளையன் எதிர்த்து போராடிய சின்னமலை மண் இது. ஈரோடு தொகுதி வெற்றி வேட்பாளர் பிரகாஷ் மக்களுக்காக சிறு வயது முதலே பணியாற்றியவர். கரூர் தொகுதி வேட்பாளர் கடந்த முறை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்த முறை அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இங்கே வந்திருக்கும் மக்களின் எழுச்சியை பார்க்கும்போது 3 வேட்பாளர்களும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன். இங்கு வரவில்லை என்றாலும் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில் வளர்ச்சி பின்னுக்கு தள்ளியை ஆட்சியை உதறித் தள்ளிவிட்டு என் மேல் நம்பிக்கை வைத்து இந்த ஆட்சியைக் கொடுத்தீர்கள். தமிழகம் தற்போது முன்னேறி உள்ளன. நான் ஆய்வுகளுக்காக துமிழகம் முழுவதும் செல்பவன். அப்படி சேலத்தில் செல்லும் போது ஒரு பெண்மணி சொல்லும் போது கேட்டேன் ‘எனது கணவர் பெயிண்டர். அவரது வருமானம் போதவில்லை. தற்போது காலை உணவு திட்டத்தால் பிள்ளைகள் சுவையாக சாப்பிடுகிறார்கள். நீங்கள் கொடுக்கும் உதவி தொகையை கொண்டு சேமிப்பு கணக்கு துவங்கி உள்ளேன். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என அந்த தாய் கூறினார்.
15 லட்சம் மகளிர் உரிமையோடு மகிழ்ச்சியோடு உள்ளார்கள். நாள் தோறும் பல திட்டம் உருவாக்கி மக்களுக்கான ஆட்சியாக நாம் செயல்பட்டு வருகிறோம். புதிய தொழிற்சாலை அமைக்க 621 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை பொறுத்துக் கொள்ளாத அதிமுக பாஜக நம்மை நோக்கி குறை கூறுகிறார்கள்.
பாஜக மகளிர் உரிமை தொகை பிச்சை என கூறி நிதி தர மறுக்கிறார்கள். சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்வோம்
இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு. அருந்ததியனருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது கலைஞர்தான். இந்தியாவில் மிகபெரிய ஊழல் தேர்தல் பத்திர ஊழல்தான் இது அனைத்தும் ஜீன் மாதம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அம்பலமாகும்.
"அடக்குமுறை எப்போதும் வெல்லாது" என்பதை இந்தத் தேர்தல் மூலம், இந்திய நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்குப் புரிய வைப்பார்கள். பா.ஜ.க. எனும் மக்கள் விரோத - ஜனநாயக விரோதக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படவுள்ள நாளான ஜூன் 4 இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாளாக வரலாற்றில் பதியட்டும்!
இந்த வெற்றிச் சரிதம் எழுத, ஈரோடு மக்கள் திமுக வின் வெற்றி வேட்பாளர் பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், கரூர் தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணிக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், நாமக்கல் தொகுதி மக்கள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.