Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

08:06 AM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்ற மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியது. இந்நிலையில், அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இப்போட்டி டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற உள்ளது. 

இந்த டி20ஐ தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வீரர்கள் பட்டியலை நேற்று ( ஜன.07)  வெளியிட்டது. காயங்கள் காரணமாக பல முக்கிய வீரர்களின் பெயர்கள் தேர்வுக்கு இடம்பெறவில்லை. அதேசமயம் பல சிறந்த வீரர்களின் தேர்வு குறித்து கேள்விக்குறிகள் உள்ளன.

இந்த இந்திய அணியில் மீண்டும் டி20 உலக கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாகவே அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, விராட் கோலியும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். ரோஹித் சர்மா,விராட் கோலி ஆகியோர் 13 மாதங்களுக்கு பிறகு களம் காண உள்ளனர்.

இதையும் படியுங்கள் : 5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா – முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும்.!

அதனை தவிர்த்து முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத வேளையில் மேலும் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) விராட் கோலி, 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) ஜிதேஷ் சர்மா, 8) சஞ்சு சாம்சன், 9) சிவம் துபே, 10) வாஷிங்க்டன் சுந்தர், 11) அக்சர் படேல், 12) ரவி பிஷ்னாய், 13) குல்தீப் யாதவ், 14) அர்ஷ்தீப் சிங், 15) ஆவேஷ் கான், 16) முகேஷ் குமார்.

Tags :
IND vs AFGindianteamT20SeriesTeamSquad
Advertisement
Next Article