Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் - ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!

10:24 AM Dec 13, 2023 IST | Jeni
Advertisement

காஸாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

Advertisement

கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

பாலஸ்தீனத்தின் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 80% சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட்ட வேண்டும், பிணைக் கைதிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐநா பொதுச்சபையில் வரைவுத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் வாக்களித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

இதையும் படியுங்கள் : ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்காகத்தான் ரூசோவிடம் பணம் வாங்கினேன்.! - நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்

ஐநாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூட்டத்தில் பேசுகையில், போர் காரணமாக காஸாவில் மனிதாபிமான பேரவலம் ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவித்தார். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களின் உயிர்கள் பறிபோய் இருப்பதாக கூறிய அவர், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

Tags :
GazaIndiaIsraelPalestinepeaceStopWarsupportUNUNOwar
Advertisement
Next Article