ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது .
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கு பின் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (c), ஸ்மிருதி மந்தனா (vc), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (wk.), ரிச்சா கோஷ் (wk.), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா சிங், ரேணுகா சிங், ரேணுகா. தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ஹர்லீன் தியோல்
டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (c), ஸ்மிருதி மந்தனா (vc), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (wk.), ரிச்சா கோஷ் (wk.), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், ரீனுகா இஷாக், தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி
இந்த அணிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 02 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பின்னர், DY பாட்டீல், நவி மும்பை மைதானத்தில் ஜனவரி 05, 07, 09, ஆகிய தேதிகளில் மூன்று T20I போட்டிகளை நடைபெறும்.