For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதல் இன்னிங்ஸில் தடுமாறும் இந்தியா.. - 89ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

07:48 PM Nov 01, 2024 IST | Web Editor
முதல் இன்னிங்ஸில் தடுமாறும் இந்தியா     89ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்
Advertisement

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாறி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூரில் நடந்த முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2வது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அதன்மூலம், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.1) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக கான்வே மற்றும் கேப்டன் டாம் லாதம் ஆகியோர் களமிறங்கினர்.

கான்வே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க கேப்டன் லாதமுடன் ஜோடி சேர்ந்த வில் யங் நிதானமாக விளையாடி ரன் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கேப்டன் லாதம் 28ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 5ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் வில் யங்குடன் டேரில் மிட்சல் ஜோடி சேர்ந்தார் நிதானமாக ரன்களை சேர்த்தனர்.

வில்யங் 71ரன்களுக்கு ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து டேரில் மிட்சலும் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய அனைவரும் மிகச் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் மூலம் அனைத்து விக்கெட்களையும் இழந்த 235ரன்கள் மட்டுமே குவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை சாய்த்து ஜடேஜா அசத்தியுள்ளார். அதேபோல வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 18 ரன் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜெய்ஸ்வால் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது சிராஜ் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியை கொடுத்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. சுப்மன் கில் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Tags :
Advertisement