”உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது”- பிரதமர் மோடி பேச்சு...!
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவரி இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தின் உள்ள அரங்கில் 23-ஆவது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு முன்பாக இரு நாட்டுத் தலைவா்களும் அறிமுக உரையாற்றினர்.
அப்போது பேசிய இந்திய பிரதமா் மோடி ” உக்ரைன் மீதான போா் தொடங்கியது முதல் ரஷ்யாவுடம் அது தொடா்பாக நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறோம். அங்குள்ள நிலைமை குறித்து தொடா்ச்சியாக ரஷ்யா தரப்பில் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் நம்பிக்கைதான் மிகப் பெரிய பலம்.
நாம் அனைவரும் அமைதிக்கான வழியைக் காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். போர் நிறுத்தத்திற்கான சமீபத்திய முயற்சிகள் உலகத்தை அமைதியை நோக்கித் திரும்பும் என்று நான் நம்புகிறேன். உலகத் தலைவர்களிடம் நான் பேசும் போதெல்லாம், உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்திய நடுநிலையாக இல்லை என்று நான் கூறி வருகிறேன். ஏனென்றால் இந்தியா அமைதியின் பக்கம்தான் நிற்கிறது; உக்ரைன் - ரஷ்யா இடையேயான போருக்கு சுமுக தீா்வு காண மேற்கொள்ளப்படும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும்” என்றார்.