For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்மேற்குப் பருவமழை பேரிடர்களால் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | #IMD தகவல்!

08:40 AM Oct 02, 2024 IST | Web Editor
தென்மேற்குப் பருவமழை பேரிடர்களால் 1 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு    imd தகவல்
Advertisement

நாடு முழுவதும் 2024ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதுமிருந்து 2024ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை காலத்தில் 934.8 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது சராசரி மழைப்பொழிவை விட 18 சதவீதமாக கூடுதலாகும். மத்திய இந்தியாவில் 19 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. தெற்கு இந்தியாவில் 14 சதவீதமும், வடமேற்கு இந்தியாவில் 7 சதவீதமும் வழக்கத்தை விட அதிக மழை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இயல்பை விட 14 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டுக்குப் பிறகு அதிகப்படியான மழையளவாகவும் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் 895 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழையின்போது இடி மற்றும் மின்னல் தாக்கி 597 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : Israel மீது #Iran நடத்திய ஏவுகணை தாக்குதல் - இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெ. அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!

கேரளாவில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக 397 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 102 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 100 பேரும் உயிரிழந்துள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மழையின்போது இடி, மின்னல் தாக்கியதில் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் (189) பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசம் (138), பீகார் (61)மற்றும் ஜார்கண்ட் (53) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement