For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

''மாலத்தீவிலிருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்''- அதிபர் முகமது மூயிஸ்

10:22 AM Nov 19, 2023 IST | Web Editor
  மாலத்தீவிலிருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்    அதிபர் முகமது மூயிஸ்
Advertisement

''மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்'' என அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் போட்டியிட்டனர். இப்போட்டியில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முகமது மூயிஸ் மாலத்தீவின் எட்டாவது அதிபராக வெள்ளி கிழமையன்று (நவ. 17) பதவியேற்றார்.

பதவியேற்பு விழாவில், தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்திய சார்பில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விழாவில் கலந்து கொண்டார்.

பதவியேற்றவுடன் பேசிய முகமது மூயிஸ்,
''நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். ''மாலத்தீவில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவத்துக்கும் இடம் அளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுடனான அதிபர் முகமது மூயிஸ் சந்திப்பு குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 'மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும்'' என இந்தச் சந்திப்பின்போது அதிபர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தனர்.

முன்னாள் அதிபர் இப்ராஹிம் சோலிஹ் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகப்படுத்தியதுடன், அனைத்திலும் இந்தியாவுக்கு முன்னுரிமை என்னும் நோக்கில் செயல்பட்டார். தற்போது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது மூயிஸ் சீன ஆதரவு நிலைப்பாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement