Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா! ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்!

10:18 PM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. அதிரடியாக ஆடிசதமடித்தார் ரோஹித் சர்மா.

Advertisement

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என தொடரை கைப்பற்றியது. இன்று மூன்றாவது, கடைசி போட்டி பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து பேட்டிங்கில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்தார். இவர் 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங் 69. ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ரஹமதுல்லாவும், இப்ராஹிமும் தலா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இரவு 10 மணி நிலவரப்படி, 14 ஓவர்கள் முடிவில் 140 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கன் வீரர்கள் குல்பதீன் மற்றும் முகமது நபி விளையாடி வருகின்றனர்.

Tags :
#INDvsAFG#SportsCrickethitmannews7 tamilNews7 Tamil UpdatesRohit sharmaT20Team India
Advertisement
Next Article