Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - #RahulGandhi மீண்டும் வலியுறுத்தல்!

07:00 AM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டிலுள்ள 90 சதவீத மக்கள் பயன் பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். 

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :

"இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம். இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர். அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். 90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை. இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

இதையும் படியுங்கள் :#HemaCommitteeReport | கேரள நடிகைகள் பாலியல் புகார்! ஏழு பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி. அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
#INDIAAllianceCaste CensusCongressIndiaRahul gandhiSurvey
Advertisement
Next Article