Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாடி இருக்கலாம் - அனில் கும்ப்ளே!

07:17 AM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிகப்படியான நேர்மறை எண்ணங்களுடன் விளையாடியிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸில் களமிறங்கிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 316 ரன்கள் எடுத்து  126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 420 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றி இலக்கு 231 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்திய சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா  47 ஓவரில் 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியா 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிகப்படியான நேர்மறை எண்ணங்களுடன் விளையாடியிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:

"கடந்த இரண்டு நாள்களாக இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் செயல்பாடுகள் சாதரணமானதாகவே இருந்தது. ஃபீல்டிங்கின்போது இந்திய வீரர்கள் தங்களது தலையை கீழே தொங்கவிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்திருக்கலாம். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கண்டிப்பாக இன்னும் கொஞ்சம் நேர்மறையாக விளையாடியிருக்கலாம். ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததும், ஜடேஜா ரன் அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் பேட்டிங் செய்தது, ஃபீல்டிங்கில் செயல்பட்ட விதம் அனைத்தும் சிறப்பாக இருந்தது. அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்"

இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
#SportsAnil KumbleCricketENGLANDEngland WinsNews7Tamilnews7TamilUpdatesOllie PopeRohit sharma
Advertisement
Next Article