பத்திரிகை சுதந்திரத்தில் பின்தங்கிய இந்தியா - பாஜக மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
உலக பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று(மே.3), முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஏன்? ஏனென்றால் பாஜக ஆட்சி கேள்விகளுக்கு அஞ்சுகிறது. அது செய்தி நிறுவனங்களை சோதனை செய்கிறது, செய்தியாளர்களை சிறையில் அடைக்கிறது. ஊழல், உரிமை மீறல்கள் மற்றும் அதன் பெரும்பான்மையான திட்டங்களை அம்பலப்படுத்துபவர்களை வாயடைக்கிறது.
இந்த உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தில் , நம்மை நாமே நினைவுபடுத்திக் கொள்வோம். அச்சமற்ற பத்திரிகை இல்லாமல், ஜனநாயகம் இருளில் இறந்துவிடுகிறது. அதனால்தான் நாம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். ஊடகங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மையை அறியவும், கேள்வி கேட்கவும், அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசவும் உரிமை உண்டு”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.