Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நோயை குணப்படுத்துவதிலும், தடுப்பதிலும் இந்தியா முன்னிலை” - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

09:55 PM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

நோயை குணப்படுத்துவதில் மட்டுமல்லாது, நோய் வராமல் தடுப்பதிலும் இந்தியா சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் கல்வி நிறுவனத்தில் இன்று (ஜூலை 5) நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லீரல் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் மெய்நிகர் முறையிலான இந்தியா – பிரான்ஸ் கல்லீரல், வளர்சிதை மாற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வலைப்பின்னலை மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “நோயை குணப்படுத்தும் மருத்துவத்தில் மட்டுமல்லாது, நோய்த் தடுப்பு மருத்துவத்திலும் சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மெய்நிகர் முறையிலான இந்த சிகிச்சை முறை கல்லீரல் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும். கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வது சிறு வயதிலேயே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பல நோய்களுக்கு காரணமாகிறது.

நான் ஒரு நாளமில்லா சுரப்பி மருத்துவர் என்பதால் கல்லீரலில் அதிகக் கொழுப்பின் அபாயத்தையும் அது தொடர்பான மற்ற நோய்கள் பற்றியும் அறிந்திருக்கிறேன். கல்லீரலில் கொழுப்பு சேருவதை பல்வேறு நிலைகளில் கண்டறிவதற்கு எளிதான, குறைந்த செலவிலான பரிசோதனை முறைகளை உருவாக்குவது அவசியம். 3 இந்தியர்களில் ஒருவர் கல்லீரலில் அதிகக் கொழுப்பையும், முன்கூட்டிய நீரிழிவையும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் கொண்டிருக்கிறார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Department of Science and TechnologyILBSJitendra Singhloksabhanew delhiNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article