1970-க்குப் பின் அதிக வெப்பம் பதிவான காலம் எது தெரியுமா? #America ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் பதிவான வெப்பம் கடந்த 44 ஆண்டுகளில் 2வது அதிக வெப்பமான காலகட்டமாக பதிவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிக வெப்பம், அதிக குளிர், அதிக மழை, கடும் வறட்சி என்று மாறிமாறி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நிகழாண்டின் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பருவநிலை விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் மூன்றில் ஒருபங்கு மக்கள் தொகை (42.6 கோடி) குறைந்தபட்சமாக 7 நாட்கள் அதீத வெப்பத்தை எதிர்கொண்டதாக ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :
இதையும் படியுங்கள்: #Madhyapradesh -ல் பெரிய கட்டியுடன் 6 மாதங்களாக போராடிய கிளி | 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்!
"கடந்த 1970-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் இரண்டாவது வெப்பமயமான காலகட்டமாக 2024, ஜூன்-ஆகஸ்ட் காலாண்டு பதிவாகியுள்ளது. இந்த மாதங்களில் பருவநிலை மாற்றத்தால் 29 நாட்களில் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதேபோல் பருவநிலை மாற்றத்தால் அதிகரித்த வெப்பநிலையின் தாக்கத்தால் குறைந்தபட்சம் 60 நாட்களில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 200 கோடி பேர் 30திற்கும் மேற்பட்ட நாட்களில் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளனர்.இந்தியாவில் அதிக வெப்பத்தால் திருவனந்தபுரம்,தாணே, மும்பை, டெல்லி, கான்பூர் உள்ளிட்ட நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.