இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட் தொடர் - திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!
இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட் தொடர் போட்டியின் சீசன் 2 கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளரான தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கட்டிடப் பொறியாளர்களுக்காக நடத்தும் ஐ.சி.பி.எல் சீசன்-2 கிரிக்கெட் தொடரில் 900 கட்டிட பொறியாளர்கள், உள்ளடங்கிய 60 அணிகள், 38 மாவட்டங்களில் இருந்து பங்கேற்று, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் மக்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தரும் கட்சிக்கே ஆதரவு!” – செல்ல.ராசாமணி
கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற லீக் ஆட்டங்களை தொடர்ந்து, நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
இதில், முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 112 ரன்கள் எடுத்தது. 114 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
திண்டுக்கல் வீரர் கார்த்திகேயன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, அணிக்கு வெற்றி வழிவகுத்தார். இதையடுத்து, திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளின் முன்னாள் வீரரான ஶ்ரீ வாசுதேவ்தாஸ் வழங்கி கௌரவித்தார்.