Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ் மொழியை ஒருபோதும் இந்தியால் அழிக்க முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் !

தமிழ் மொழியை இந்தியாலோ, சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
08:55 AM Feb 27, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

Advertisement

"நம் உயி­ரு­டன் கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன்­பி­றப்­பு­க­ளுக்கு உங்­க­ளில் ஒரு­வன் எழு­தும் மொழிப் போராட்ட வர­லாற்­றுப் பின்­ன­ணி­யின்      மூன்­றா­வது மடல்.

இந்­தி­யைப் படித்­தால் தமிழ் அழிந்­து­வி­டும் என்று திமுக பயப்­ப­டு­கி­றதா எனக் கேட்­கின்ற ஓரு கூட்­டத்­தார் இன்று, நேற்­றல்ல, பெரி­யார் முன்­னெ­டுத்த 1937-39 மொழிப் போராட்­டத்­தின் போதும் இருந்­த­னர். இதே கேள்­வியை அப்­போ­தும்    கேட்­ட­னர். இந்தி என்­பது ஒரு சில நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­பாக, சமஸ்­கி­ரு­த­மும் மேலும் சில மொழி­க­ளும் கலந்து திரி­ப­டைந்­த­தால் உரு­வான மொழி. தமிழ்,    ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­கள் பழ­மை­யான மொழி. தன்­னி­லி­ருந்து திரா­வி­டக் குடும்­பத்து மொழி­க­ளைக் கிளைத்­தி­டச் செய்த தாய்­மொழி.

கீழடி அக­ழாய்­வு­கள் மூலம் ஏறத்­தாழ மூவா­யி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­யான தமிழ் எழுத்­து­க­ளைக் கண்­ட­றிந்­திருக்­கி­றோம். மாங்குளம், மயி­லா­டும்­பாறை, ஆதிச்­ச­நல்­லூர், சிவ­களை ஆகிய இடங்­க­ளில் நடந்த அக­ழாய்­வு­க­ளில் கிடைத்த இரும்­புப் பொருட்­களை நவீன அறி­வி­யல் தொழில்­நுட்­ப­மான கதி­ரி­யக்­கக் கரிம காலக் கணிப்­பு­கள் மற்­றும் தூண்­டொளி காலக் கணிப்­பு­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­ய­தன்  விளை­வாக, தமி­ழர்­கள் 5300 ஆண்­டு­க­ளுக்கு முன்பே இரும்­பைப் பிரித்­தெ­டுக்­கும் தொழில்­நுட்­பத் திறன் பெற்­றி­ருந்­த­னர் என்­பது மெய்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

‘கல்­தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்­தோன்­றிய மூத்த குடி’      என்­ப­தற்­கி­ணங்க, சங்க இலக்­கி­யம் காட்­டும் குறிப்­பு­கள் பல­வும் சான்­று­க­ளு­டன்       நிரூ­பிக்­கப்­ப­டு­கின்ற அள­விற்­குத் தமிழ் மூத்த மொழி­யா­க-செம்­மொ­ழி­யா­கத்   திகழ்­கி­றது. சிறப்­பு­மிக்க தமிழ்­ மொ­ழியை இந்தி மொழி­யாலோ, இந்­தியை     முன்­னி­றுத்தி மறை­மு­க­மா­கத் திணிக்க நினைக்­கும் சமஸ்­கி­ரு­தத்­தாலோ ஒரு­போ­தும் அழிக்க முடி­யாது.

பிறகு எதற்­காக அவற்றை நாம் எதிர்க்­கி­றோம்? அதற்­கான கார­ணத்­தைத் தந்தை பெரி­யார் அன்றே சொன்­னார். “இந்­தி­யால் தமிழ் அழி­யாது. ஆனால், தமிழ்ப் பண்­பாடு அழிந்து போகும். இன்று வேலைக்­கா­ரி­யாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்­ட­ரசி ஆவது நிச்­ச­யம்” என்று எச்­ச­ரித்­தார். ஓர் இனத்தை அழிக்க வேண்­டு­மென்­றால் அதன் மொழி மீது தாக்­கு­தல் நடத்தி, பண்­பாட்டை சிதைக்க வேண்­டும் என்­பதை பாசிச எண்­ணம் கொண்­டோர் கடைப்­பி­டித்­தார்­கள்.

அண்­மை­யில் குடி­ய­ரசு துணைத் தலை­வர் ஜக­தீப் தன்­கர் இந்­தியா மீதான முந்­தைய படை­யெ­டுப்­பு­கள் குறித்­துப் பேசி­ய­போது, “ஒரு மாநி­லத்­தைக் கைப்­பற்ற வேண்­டு­மென்­றால், அதன் கலாச்­சா­ரத்தை கையி­லெ­டுப்­ப­தும், மொழியை அழிப்­ப­துமே சிறந்த வழி” என்று குறிப்­பிட்­டதை மறக்க முடி­யாது. மத்திய பாஜக அர­சின் கொள்­கையே அது­வா­கத்­தான் இருக்­கி­றது.

தமி­ழர்­க­ளின் கலாச்­சா­ரத்­தை-­­ த­னித்­து­வ­மா­னப் பண்­பாட்­டைச் சிதைக்­கும் நோக்­கத்­து­டன் பன்­னெ­டுங்­கா­ல­மாக இனப் பகை­வர்­கள் நடத்­திய படை­யெ­டுப்பை இந்த மண் தொடர்ந்து முறி­ய­டித்து வந்­தி­ருக்­கி­றது. இந்த நெடிய தமிழ்ப்  பண்பாட்டு மர­பின் தொடர்ச்­சி­தான் திரா­விட இயக்­கம்.

ஆரி­யப்­படை கடந்த நெடுஞ்­செ­ழி­யன், கங்கை கரை வரை படை­ந­டத்தி கன­க -­­ வி­சய மன்­னர்­களை வென்று கண்­ண­கிக்கு கல் எடுத்து வந்து கோட்­டம் அமைத்த சேரன் செங்­குட்­டு­வன் என மூவேந்­தர்­கள் காலத்­தில் மட்­டு­மல்­லா­மல், பக்தி இலக்­கி­யங்­க­ளைப் பரப்­பிய நாயன்­மார்­கள், ஆழ்­வார்­கள், மெய்­யி­யல் போற்­றிய சித்­தர்­கள், சம­ரச சுத்த சன்­மார்க்க நெறியை வழங்­கிய அருட் பி­ர­காச வள்­ள­லார் உள்­ளிட்­டோர் சமஸ்­கி­ரு­தத் திணிப்பை எதிர்த்து, தமிழை ஆயு­த­மா­கக் கொண்டு பண்­பாட்­டுப் படை­ய­டுப்­பைத் தடுத்­த­னர்.

தந்தை பெரி­யார், பே­ர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வழி­யி­லான திரா­விட இயக்­கம் ஆதிக்க மொழி­யின் ­ப­டை­யெ­டுப்பை முறி­ய­டித்து, தமி­ழைப் பாது­காக்­கும் அர­ணா­கத் திகழ்­கி­றது.

தமிழ் தனித்து இயங்­கும் தன்மை கொண்ட செம்­மொழி என்­ப­தும் இந்­தி­யா­வின் பிற மொழி­கள் போல வட­மொழி ஆதிக்­கத்­தால் சிதை­வு­றா­மல் என்­றும் நிலைத்­தி­ருக்­கும் மொழி என்­ப­தும் இந்­திய ஒன்­றி­யத்தை ஆட்சி செய்­ப­வர்­க­ளின் கண்­களை உறுத்­திக் கொண்­டி­ருக்­கி­றது. தமிழ் எனும் கோட்­டைக்­குள் ஓட்டை போட்டு நுழைய நினைக்­கும் இந்­தி -­­ ச­மஸ்­கி­ரு­தத் திணிப்பை அன்று முதல் இன்று வரை தடுத்து விரட்­டும் காவ­லர்­க­ள­கத் திரா­விட இயக்­கத்­தி­னர் திகழ்­கின்­ற­னர்.

ஆதிக்­கத்தை உணர முடி­யா­மல் போன­வர்­க­ளின் தாய்­மொ­ழி­கள் கடந்த ஒரு நூற்­றாண்டு காலத்­தில் கரைந்து காணா­மல் போன துயர வர­லாற்றை, இந்தி
பர­விய நிலப்­ப­ரப் பெங்­கும் காண முடி­யும்.

இந்தி மொழியை ஏற்­றுக்­கொண்ட பீகார் மாநில மக்­க­ளின் சொந்த மொழி­யான மைத்­திலி, அந்த மாநி­லத்­தின் அடுத்­த­டுத்த தலை­மு­றை­யி­னர் அறிய முடி­யா­த­படி வழக்­கொ­ழிந்­தது. அண்­மைக்­ கா­ல­மா­கத்­தான் மைத்­திலி மொழி பேசும் மக்­கள் மெல்ல விழிப் பு­ணர்வு பெற்று, தாய்­மொ­ழியை மீட்­டெ ­டுப்­ப­தற்­கான
நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்­கி­யுள்­ள­னர். இந்­தி­யா­வின் பெரிய மாநி­லம் உத்­த­ர­பி­ர­தே­சம். இந்­தி­தான் அந்த மாநி­லத்­தின் தாய்­மொழி எனப் பல­ரும் நினைப்­போம். உண்மை அது­வல்ல.

வட­மேற்கு உத்­த­ர­பி­ரதேச மக்­க­ளின் மொழி பிரஜ்­பாஷா, தென்­மேற்கு உத்­தர பிர­தே­சத்­தின் தாய்­மொழி புந்­தேல்­கண்டி. வட­கி­ழக்கு உத்­த­ர­பி­ர­தே­சத்­தின் சொந்த மொழி போஜ்­புரி. மத்­திய உத்­த­ர­பி­ர­தே­சத்­தின் உள்­ப­கு­தி­ க­ளில் பேசப்­பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்­து­டன், கண்­ணோஜி என்ற மொழி­யும் இப்­ப­கு­தி­யில் வழக்­கில் இருந்­தது. உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் இருந்து பிரிக்­கப்­பட்ட மாநி­ல­மான உத்­த­ர­காண்­டில் வாழும் மக்­க­ளின் பூர்­வீக மொழி கடு­வாலி மற்­றும் குமோனி.

மண்­ணின் மைந்­தர்­க­ளு­டைய மொழி­கள் அனைத்­தை­யும் இந்தி என்­கிற ஆதிக்க மொழி­யின் படை­யெ­டுப்பு சிதைத்­து­விட்­டது. போஜ்­புரி, ஆவ்தி போன்ற மொழி­கள் பெரும் அவ­திகளுக்­கி­டையே இப்­போ­து­தான் மெல்­லத் துளிர்க்­கின்­றன.

இவை மட்­டுமா? ஹரி­யாண்வி, ராஜஸ்­தானி, மார்­வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்­கன்ஷி, சந்த்­தலி, சட்­டீஸ்­கரி, கோர்பா உள்­ளிட்ட மொழி­கள் பேசு­வோ­ரைத் தேட வேண்­டி­யுள்­ளது. உத்­த­ர­பி­ர­தே­சம், பீகார், மத்­திய பிர­தே­சம், ஜார்­கண்ட், சட்­டீஸ்­கர், ஹரி­யானா, ராஜஸ்­தான் என இந்­தியை ஆட்­சி­மொ­ழி­யா­கக் கொண்ட மாநி­லங்­க­ளின் பூர்­வீக மொழி­கள் சிதைக்­கப்­பட்டு, அழிக்­கப்­பட்ட நிலை­யில், அந்த மொழி பேசும் மக்­க­ளின் பண்­பாட்டு விழு­மி­யங்க­ளும், இலக்­கி­யச் செழு­மை­க­ளும், மர­பார்ந்த அறி­வுத்­தி­ற­னும் இருந்த இடம் தெரி­யா­மல் மறைந்து போயி­ருக்­கின்­றன.

வட­இந்­திய மாநி­லங்­க­ளில் 25க்கும் மேற்­பட்ட அந்­தந்த மண்­ணின் தாய்­மொ­ழி­களை கடந்த ஒரு நூற்­றாண்டு காலத்­தில் இந்­தி, ச­மஸ்­கி­ரு­தம் எனும் ஆதிக்க மொழி­க­ளின் படை­யெ­டுப்பு சிதைத்­தி­ருக்­கி­றது. நூற்­றாண்­டைக் கடந்த திரா­விட இயக்­கம் ஏற்­ப­டுத்­திய விழிப்­பு­ணர்­வி­னா­லும், அதன் தொடர்ச்­சி­யா­னப் போராட்­டத்­தி­னா­லும் நம்தாய்த் தமிழ் மொழி காப்­பாற்­றப்­பட்டு, தமி­ழர்­க­ளின் பண்­பாட்­டுப் பெரு­மை­கள் நிலை­நி­றுத்­தப் ­பட்­டி­ருக்­கின்­றன.

இதனை சீர்­கு­லைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன்­தான் மத்திய பாஜக அர­சின் தேசிய கல்­விக் கொள்கை மூலம் இந்­தி, ­­ச­மஸ்­கி­ருத மொழி­க­ளைத் தி­ணிக்­கும் முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இத­னை­ உ­ணர்ந்­தி­ருப்­ப­தால்­ தான் தமிழ்­நாடு எதிர்க்­கி­றது.

என்­றும் தமி­ழைக் காத்து நிற்­கும் திமுக தமிழ்­நாட்­டில் உள்ள பல கட்­சி­க­ளும் இணைந்து இந்­தித் திணிப்பை எதிர்க்­கின்­றன. கழ­கத்தை அர­சி­யல் களத்­தில் எப்­போ­தும் எதிர்க்­கும் கட்­சி­க­ளும்­ கூட இந்­தித் திணிப்பு கூடாது என்­கின்­றன". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
CHIEF MINISTERCMhindiIndiaLetterM.K. Stalin'sSupporterstamil languageTamilNadu
Advertisement
Next Article