ஜிம்பாப்வே அணியை 125ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது இந்தியா : 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்!
ஜிம்பாப்வே அணியை 125ரன்களுக்கு சுருட்டி இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 4-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது .
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்ஸன் ஜோடி களமிறங்கியது. அபிஷேக்கும் 14ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற சஞ்சு சாம்ஸன் நின்று ஆடி அரை சதம் விளாசினார்.
சஞ்சு சாம்ஸன் 58ரன்களில் 5வது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். அபிஷேக்கிற்கு பிறகு களமிறங்கிய ரியான் பராக் மற்றும் சிவம் துபே தங்கள் பங்கிற்கு ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6விக்கெட் இழப்பிற்கு 167ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு இந்திய அணி 168ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங்கிய களமிறங்கிய தொடக்க வீரர்களான வெஸ்லி மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக இரண்டாம் வீரராக களமிறங்கிய டடிவனாஸே 27ரன்களும், டியோன் மயர்ஸ் 37ரன்களும் , ஃபராஸ் அக்ரம் 27 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
20ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 125ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை 4-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது.