For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#AsianChampionsCupHockey : மலேசியாவை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி!

07:53 PM Sep 11, 2024 IST | Web Editor
 asianchampionscuphockey   மலேசியாவை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி
Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

Advertisement

ஆசிய சாம்பியன்ஸிப் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சீனாவின் ஹுலுன்பியர் நகரில் செப்டம்பர் 8ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

இந்திய அணித் தரப்பில் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்த ராஜ் குமார் (3-வது, 25-வது மற்றும் 33-வது நிமிடம்), அராய்ஜீத் சிங் ஹண்டால் (6-வது மற்றும் 39-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (7-வது நிமிடம்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (22-வது நிமிடம்), மற்றும் உத்தம் சிங் (40-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். மலேசியா தரப்பில் அகிமுல்லா அனுவார் (34-வது நிமிடம்) ஒரேயொரு கோல் மட்டும் அடித்தார்.

இதையும் படியுங்கள் :“திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” – அமைச்சர் #Saminathan அறிவிப்பு

இந்தியா தற்போது 3 வெற்றிகள் 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்தத் தொடரில், ரவுண்ட்-ராபின் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 16-ஆம் தேதியும், இறுதிப் போட்டி 17-ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன.

Tags :
Advertisement