For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#IndependenceDay | #Sivakarthikeyan நடிக்கும் 'அமரன்' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

12:24 PM Aug 15, 2024 IST | Web Editor
 independenceday    sivakarthikeyan நடிக்கும்  அமரன்  படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு 'அமரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

Advertisement

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 'அமரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement