பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம் - 3 பேர் உயிரிழப்பு!
1947 ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் பாகிஸ்தானில்ஆகஸ்ட் 14அன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் இதுவரை 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 8 வயது சிறுமி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் இதுரை இந்த துப்பாக்கிசூடுகளால் 60 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.
இந்த செயலுக்கு மீட்புப்படை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இது பொறுப்பற்ற செயல் என்றும் அபாயகரமானது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் கராச்சி முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 233 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.