Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WomensT20WorldCup | இந்தியா- இலங்கை இன்று மோதல்!

06:42 AM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதுகிறது.

Advertisement

9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று (அக் - 9ம் தேதி ) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும். இலங்கையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா, தீப்திசர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 2-து போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவுஇல்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags :
CricketIND vs SLIndiaNews7Tamilnews7TamilUpdatesSL vs INDSrilankaT20 match
Advertisement
Next Article