For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IND vs SA | அஸ்வினின் சாதனையை முறியடித்த #VarunChakaravarthy!

06:07 PM Nov 14, 2024 IST | Web Editor
ind vs sa   அஸ்வினின் சாதனையை முறியடித்த  varunchakaravarthy
Advertisement

சர்வதேச இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோரின் சாதனைகளை உடைத்து வருண் சக்கரவர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி நேற்று (நவ.14) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா (107 ரன்கள்) சதமடித்து அசத்தினார். இதனையடுத்து, 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். முன்னதாக இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து வருண் சக்ரவர்த்தி நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன் வாயிலாக ஒரு சர்வதேச இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோரின் சாதனைகளை உடைத்து வருண் சக்கரவர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு இலங்கை எதிரான தொடரில் அஸ்வின் 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதே போல 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரவி பிஸ்னோய் 9 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது அவர்களை முந்தி வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார்.

Advertisement