Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IND vs ENG | 3வது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி அசத்தல் பந்துவீச்சு - இந்தியாவுக்கு 172ரன்கள் இலக்கு!

09:21 PM Jan 28, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜன. 25ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 2விக்கெட்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றும் 2புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் ராஜ்காட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து  இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சால்ட் இரண்டாவது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் லிவிங்ஸ்டன் மற்றும் பெண்டக்கெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

20ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9விக்கெட்கள் இழந்து 171ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் வருண் சக்கரவர்த்தி 5விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். பிளேயிங் லெவனில் களமிறங்கிய பந்துவீச்சாளர் முகமது ஷமி 3ஓவர்கள் வீசி 25ரன்களை கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு 172ரன்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது.

Tags :
ENGLANDIndiaT20VARUN CHAKRAVARTHY
Advertisement
Next Article