IND VS ENG டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானதில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும் மாறுகிறது. ஆனால் தற்போது பனிக்காலம் என்பதால், பௌலர்களுக்கு பனிப்பொழிவு சவால் அளிக்கும். மைதானத்தில் இதுவரை முதலில் பௌலிங் செய்த அணிகளே ஆட்டங்களில் வென்றுள்ளன.
ஒரு நாள் T20 போட்டியின் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் , அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கி), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் , வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
இங்கிலாந்து கேப்டனாக ஜோஸ் பட்லர் , ஹாரி புரூக், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், அடில் ரஷித் சாகிப் மஹ்மூத் ஆகியோர் உள்ளனர்.