For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#INDvsAUS | 10 ஆண்டுகளாக போராடி பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி!

10:53 AM Jan 05, 2025 IST | Web Editor
 indvsaus   10 ஆண்டுகளாக போராடி பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி
Advertisement

சிட்னியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதையடுத்து 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகுத்தது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்ரேலியா 51 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 157 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து மூன்றாவது நாளான இன்று ஆல் - அவுட் ஆனது. இதனையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்ரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து 4 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 157 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் 10 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement