#INDvsAUS : 104 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்...! 5 விக்கெட்டுகள் வீழ்த்தி கேப்டன் பும்ரா அசத்தல்!
பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக 104 ரன்களிலேயே ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா, இரண்டாம் நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களை மட்டுமே குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்களையும், ஷர்தித் ராண் மூன்று விக்கெட்களையும், சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.