எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!
டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் முழுவதும் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை சிஐடி நகர் பகுதியில் மழைக்கால நோய்கள் முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்த வைத்தார். அதன் பின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதையும் படியுங்கள் : “புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – நேரடி வரிகள் வாரியத் தலைவா்!
சென்னை, திருநெல்வேலி, திருப்பத்தூர்,தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு 6,565 பேர் டெங்குவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் முழுவதும் கையிருப்பில் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, கொசு புழு ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவில் கொசு புழு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.