For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் அதிகரிக்கும் தாக்குதல்கள் - இந்திய மாணவர்களுக்கு இந்திரா நூயி வேண்டுகோள்!

11:19 AM Mar 24, 2024 IST | Web Editor
அமெரிக்காவில் அதிகரிக்கும் தாக்குதல்கள்   இந்திய மாணவர்களுக்கு இந்திரா நூயி வேண்டுகோள்
Advertisement

அமெரிக்காவில் அதிகரிக்கும் தாக்குதல்கள் குறித்து இந்திய மாணவர்களுக்கு பிரபல பெப்ஸிகோ நிறுனத்தின் சிஇஓ வாக இருந்த  இந்திரா நூயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 29-ம் தேதி இந்திய மாணவரான விவேக் சைனி, ஜார்ஜியாவின் லித்தோனியாவில், ஒருவர் சுத்தியலால் தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். ஜனவரி 30-ம் தேதி, பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா காணாமல்போன சில நாள்களில், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வாரம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சையத் மசாஹிர் அலி, கடந்த 4-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளானர் எனத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய வம்சாவளியும் பிரபல பெப்சிகோ சிஇஓவுமான இந்திரா நூயி 10 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திரா நூயி தெரிவித்துள்ளதாவது..

” இந்த வீடியோவை வெளியிட காரணம், இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சில பிரச்சினைகளில் சிக்குவது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கிறேன். ஏற்கெனவே அமெரிக்கா வந்து படிக்கும் இந்திய இளைஞர்கள் அல்லது இனிமேல் அமெரிக்கா வர நினைக்கும் இந்திய இளைஞர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இங்கு வந்த பிறகு உள்ளூர் சட்டத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். போதை பொருட்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இரவு நேரத்தில் இருட்டான பகுதிகளுக்கு செல்வது, அளவுக்கதிகமாக மது அருந்துவது போன்றவற்றை தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். அப்படி செய்வதால்தான் பெரும் பிரச்சினையாகிறது. அதேபோல் அமெரிக்கா வரும்இந்திய மாணவர்கள் எந்தப்பல்கலைக்கழகம், என்ன படிப்பதுஎன்பதை மிகவும் கவனமாக தேர்ந்தெடுங்கள்.

அமெரிக்கா வந்த சில மாதங்கள் மிகவும் கவனமாக இருங்கள். குடும்பம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்து விஷயங்களில் இருந்தும் வெகு தூரம் வந்துவிட்டதால், முழு சுதந்திரம் இருக்கும். இங்கு எல்லா பழக்கத்தையும் முயற்சிப்பது எளிது. எனினும், பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்திய மாணவர்களின் கடின உழைப்பு, திறமை பற்றி நான் அறிவேன். மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாகும் சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இருந்து விலகி இருங்கள். அந்தப் பழக்கம் மிகவும் கொடியது. அது உங்களுடைய உடல்நலன், மனநலனை கெடுக்கும். உங்கள்எதிர்காலத்தை, தொழிலை சீரழித்துவிடும்.

எனவே, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுங்கள். விசா, பகுதி நேர வேலை போன்ற விஷயங்களில் சட்டத்தை மீறாதீர்கள். அமெரிக்காவில் உங்களுடைய எல்லை எதுவரை என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்”   இந்திரா நூயி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement