Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை | 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

02:25 PM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Advertisement

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீரானது அதிகரித்து காணப்பட்டது.  குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதேபோன்று கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு 19,250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 93,828 கன அடியாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணை 71 வது முறையாக 100 அடியை எட்டி உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 63.69 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, ஓரிரு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து அணையின் முழு கொள்ளளமான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். எனவே காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :
cauvery riverflood warning
Advertisement
Next Article