"தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு" - பொது சுகாதாரத்துறை தகவல்..!
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் 136 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 4000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பாதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் தேனி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் 8,953 டெங்கு காய்ச்சல் பதிவாகி அதனால் 10 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக கோடை மாதங்களில் டெங்கு பாதிப்பு குறைந்து ஆகஸ்ட்-செப்டம்பர் மழைக்குப் பிறகு டெங்கு காய்ச்சால் பாதிப்பு அதிகரிக்கும். தென் மாவட்டங்களில் மழை பெய்வதால் கொசுக்களால் பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு மற்றும் மலேரியாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த மாதம் 300-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.