Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!

12:15 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வரிமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.  

Advertisement

சென்னை பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில்
உள்ள பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் (PLR Blue Metals) என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி,  மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனை நேற்று இரவு சுமார் 12.30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை நடைபெற்றது.

இந்த சோதனையில்,  கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிறுவனம் பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.  இந்த சோதனையில் பணம் சிக்கியதும்,  இதனைத் தொடர்ந்து லிங்கராஜ் வீடு,  குவாரி என அவருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் சேர்த்து, மொத்தமாக ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக பேசப்படுகிறது.   நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
ChennaiIncome TaxITit raidPallavaram
Advertisement
Next Article