Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#MadhyaPradesh | ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானமா? இணையத்தில் வைரலாகும் #IncomeCertificate !

07:49 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம் என்று குறிப்பிட்டிருந்த வருமான சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

மத்திய பிரதேசம் புந்தேல்கண்டில் உள்ள சாகர் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமான சான்றிதழில் வெறும் ரூ.2 என குறிப்பிட்டு தாசில்தார் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார். இந்த சான்றிதழில் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த வருமான சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வருமானச் சான்றிதழ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள பண்டா தெஹ்சில் என்ற பகுதிக்கு அருகில் உள்ள கோக்ரா கிராமத்தில் பல்ராம் சாதரு என்பவர் வசித்து வருகிறார். பல்ராம், 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் குடும்பத்தில் இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று மொத்தம் 5 பேர் இருக்கின்றனர். இவரின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இதையடுத்து, பள்ளி விடுமுறை தினத்தில் குடும்ப வறுமையின் காரணமாக பல்ராம் தனது பெற்றோருடன் கூலி வேலைக்கு செல்வார்.

இதையும் படியுங்கள் : ThailandFireAccident | ஆசிரியர்கள், மாணவர்கள் என 23 பேர் உயிரிழந்த சோகம் – ஓட்டுநர் கைது!

இந்நிலையில், பல்ராம் தனது பள்ளியில் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக வருமான சான்றிதழை கொடுத்துள்ளார். பின்னர், உதவித்தொகை வராததால் ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆசிரியர்கள் வருமான சான்றிதழை சரிபார்த்த போது சான்றிதழில் குறிப்பிட்டுள்ள வருமானம் தவறானது என தெரிய வந்தது. இந்த வருமான சான்றிதழில் ஆண்டு வருமானம் வெறும் ரூ.2 என குறிப்பிட்டிருந்தது.

வருமான சான்றிதழை CSC மையத்தில் இருந்து பெற்றதாகவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.40,000 என தெரிவித்திருந்தும், அதில் ரூ.2 என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் பல்ராம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, வருமான சான்றிதழ் வழங்கிய தாசில்தார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர், ​​ரூ.2 மதிப்புள்ள வருமானச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு ரூ.40,000 வருமான சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

Tags :
annual incomeincome certificateMadhyapradeshNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article