"எடப்பாடி பழனிச்சாமி எந்த வகையில் சிறந்தவராக இருக்க முடியும்" - கே.எஸ். அழகிரி பேட்டி!
சிதம்பரத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 70 ரூபாய், 60 ரூபாய்க்கு பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் 120 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் உள்நாட்டு வரியை குறைத்ததன் காரணமாக மன்மோகன் சிங் குறைந்த விலைக்கு மக்களுக்கு அதனை வழங்கினார். ஆனால் இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை மிக மிக குறைந்துவிட்டது. ஆனால் இவர்கள் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள், காரணம் என்னவென்றால் இவர்கள் வரியை குறைக்கவில்லை. குறைந்த விலையில் கச்சா எண்ணையை வாங்கி மிக அதிக விலையில் மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை குறைந்து விடும். முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் அதனால் அவர்கள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை.
கரூரில் செந்தில்பாலாஜி முன்னிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி சேர்த்ததற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்னவென்று கேட்டதற்கு. காங்கிரஸ் கட்சி நிர்வாகியை திமுகவில் சேர்த்தது அநாகரிகமானது, நல்ல செயலல்ல, ஏற்றுக்கொள்ளக் கூடாதது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது என நான் கருதுகிறேன்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயுடன் கூட்டணி காங்கிரஸ் கட்சி பேசுவதாக தகவல் தெரிகிறது என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மதசார்பின்மை மிக நம்பிக்கை உடைய அரசியல் இயக்கம் நாங்கள் எங்களுடைய தலைவர் ஸ்டாலின், எங்களுடைய தலைவர் ராகுல், ஸ்டாலின் அவர்களுக்கு சிறந்த நண்பர்.
எங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் அமைச்சரவையில் பங்கு வேண்டும் கேட்பதெல்லாம் எங்களுடைய உரிமைகள், எங்களுடைய ஆசைகள், எங்களுடைய விருப்பங்கள், அதற்காக நாங்கள் கூட்டணி மாறி விடுவோம். வேறு கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி பரிசுத்தமானவரா தூய்மையானவரா நம்பிக்கைக்குரியவரா அல்லது நண்பர்களே காப்பாற்றியவரா, அவர் எந்த வகையில் சிறந்தவராக இருக்க முடியும் அவர் தனிப்பட்ட விமர்சனங்களை எங்கள் மாநிலத் தலைவர் பற்றி பேசி இருக்கக் கூடாது. செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி வருகிறது. நான் தலைவராக இருக்கும்போது அந்த தொகுதியை செல்வப் பெருந்தகைக்கு நான்தான் கொடுத்தேன்.
எங்களுக்கு தேர்தல் பார்வையாளராக வந்த முன்னாள் மாநில முதலமைச்சர் அந்த தொகுதியை அவருக்கு தர வேண்டாம் என்று கூறினார். நான்தான் அதற்கு மறுப்பு சொன்னேன் ராஜீவ் காந்தியின் நினைவிடம் ஸ்ரீபெரும்புதூர் நினைவகம் இருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல நாங்கள் தமிழகத்தில் 110 இடங்களில் போட்டியிட்டோம். இன்றைக்கு குறைவான இடங்களில் போட்டியிடுகின்றோம். இந்த நிலை மாற வேண்டும் என்று கருதுகிறோம்.
தமிழக வெற்றி கழகத்தினால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. எங்களுடைய வாக்கு சதவீதம் 45 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. அவர்களது வாக்கு சதவீதம் என்னவென்று இதுவரை நிருபிக்கவில்லை. அதிமுக கூட 20 முதல் 23 சதவீதம் பெற முடியாது, அவர்களோடு கூட்டணி சேர்வதற்கெல்லாம் ஒரு பழகுனமான நிலையில் இருக்கக்கூடியவர்கள். எனவே எங்களுடைய வாக்கு சதவீதம் அவர்களுடைய வாக்கு சதவீதம் வித்தியாசம் உள்ளது. எனவே அதனை அவர்கள் நெருங்கவே முடியாது, நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.