பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் நீட்டிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஜன.15-ம் தேதி முதல் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை சுற்றுலா
பயணிகள் அதிகளவில் சென்று பார்த்து வருகின்றனர். பயணிகள் செல்வதற்காக சுற்றுலா படகுகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4:30 மணி வரை இயக்கப்படும். இதனிடையே விடுமுறை காலங்கள், பண்டிகை காலங்கள், சுற்றுலா சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நாட்களில் படகுகளில் செல்வதற்காக சுற்றுலாப் பயணிகள் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
இதையும் படியுங்கள்: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2024 – இந்திய அணி அறிவிப்பு!
இந்நிலையில் இந்த சூழலை தவிர்ப்பதற்காக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜன.15-ம் தேதி முதல் ஜன.17-ம் தேதி வரை சுற்றுலா படகுகள் கூடுதலாக 4 மணி நேரம் இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.