Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேதாரண்யத்தில் 100 அடி உள் வாங்கிய கடல் - மீனவர்கள் அச்சம்!

10:59 AM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் சன்னதி கடல் 100 அடி தூரம் உள் வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை ஓய்ந்து உள்ளது. இந்நிலையில், வேதாரண்யத்தில் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், கடல் நீர் உள்வாங்கி பகுதியில் சுமார் 100 அடி தூரம் சேரும் சக அதிகமாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் : அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு -நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்!

கடலில் சுமார் மூன்று அடி முதல் நான்கு அடி ஆழம்வரை சேரும் சகதியாகவும்
காணப்படுவதால் மீனவர்களும் பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.மேலும் கடலில் அலைகள் இன்றி அமைதியாக காணப்படுகிறது.  பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள் வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடல் உள்வாங்கி சேரும் சக அதிகமாக காணப்படும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில்
காற்று அதிகமாக வீசி அலைகள் எழுந்தவுடன் கடல் ஓரத்தில் உள்ள சேரு கரைந்து
சீராகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags :
100 feetFishermenintrudedNagapattinamsannathi seavedaranyam
Advertisement
Next Article