Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் ரூ. 17,300 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி! திட்டங்களின் முழு விவரம்...

11:07 AM Feb 28, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் ரூ. 17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

Advertisement

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும்,  பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார்.  அந்த வகையில் நேற்று  திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.  பின்னர் மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற MSME டிஜிட்டல் வர்த்தக கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.  பின்னர் இரவு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.  இதையடுத்து இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி,  ரூ. 17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி நலத் திட்டங்களைத் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

பிரதமர் மோடி அடிக்கல் மற்றும் திறந்து வைத்த திட்டங்கள்

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,  மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால்,  எல்.முருகன்,  தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் வணக்கம் எனக்கூறி பிரதமர் தன் உரையை தொடங்கினார்.

Tags :
Development Welfare ProjectsNarendra modiPMThoothukudi
Advertisement
Next Article