Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்!

11:10 AM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

உதகை அதன் சுற்று வட்டார பகுதிகளில், சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால்,  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியாலும்,  உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையாலும் யானை,  மான்,  காட்டுமாடு,  சிறுத்தை உள்ளிட்ட  வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.  இந்த நிலையில்,  பல பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்கிறது.  நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

சிறுத்தைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் உதகை தீட்டுக்கல் பகுதியில் சிறுத்தை ஒன்று, தடுப்பு
வேலி கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளது.  இதனைத்தொடர்ந்து, கேத்தி பாலடா, மேல் ஓடயரட்டி கிராமங்களில், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வரும்
காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே இப்பகுதியில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர்
கண்காணித்து, கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
#residential arealeopardNews7Tamilnews7TamilUpdatesNilgirisooty
Advertisement
Next Article